இந்தி மொழி எந்த மொழிக்கும் எதிரியல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். Kanimozhi Amit Shah Hindi
டெல்லியில் இன்று ஜூன் 27-ந் தேதி நடைபெற்ற அலுவல் மொழித் துறையின் பொன்விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியானது எந்த ஒரு இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை. இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி என கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி தமது எக்ஸ் பக்கத்தில் அளித்த பதில்: சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம். இவ்வாறு கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.