கனிமொழி ஜப்பான் பயணம்… ஏன்?

Published On:

| By Aara

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஜப்பான் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

நேற்று (ஏப்ரல் 17) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பானுக்கான இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த டின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக தளத்தில் பதிவேற்றியிருந்தார். Kanimozhi Japan visit why

அந்த நிகழ்வில் கனிமொழியோடு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் உளிட்டோர் கலந்துகொண்டனர்.

கனிமொழி தனது சமூக தளப் பதிவில், “ஜப்பானுக்கான இந்திய தூதர் ஷிபு ஜார்ஜ் டோக்கியோவில் வழங்கிய டின்னரில் கலந்து கொண்டேன். தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில், கனிமொழியின் இந்த ஜப்பான் பயணம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. Kanimozhi Japan visit why

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “நீண்ட நாட்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து சமீபத்தில்தான் முடிந்திருக்கிறது. இந்நிலையில், கனிமொழி திமுக தலைவரான முதல்வரின் அனுமதி பெற்று பர்சனல் பயணமாக ஜப்பான் சென்றிருக்கிறார்.

கனிமொழி ஜப்பான் சென்றிருந்த அதேநேரம் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தங்கள் மாநிலத்துக்கான முதலீடுகள் மற்றும் நிதியாதாரங்கள் தொடர்பாக ஜப்பானில் பல்வேறு அமைப்பினருடன் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

பொதுவாகவே இந்தியாவில் இருந்து மாநில முதல்வரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே இருக்கும் இந்திய தூதரகம் அவர்களை அழைத்து விருந்தளித்து கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் தான் ஜப்பானின் இந்திய தூதரகம் கனிமொழி, ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரை அழைத்து விருந்து அளித்தது.

ரேவந்த் ரெட்டி மேற்கொண்டது அரசுப் பயணம். கனிமொழி மேற்கொண்டது தனிப்பட்ட பயணம்” என்று பதிலளித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share