பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்காக… அரசுபள்ளி மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Published On:

| By christopher

kanchipuram govt school students get first two prize

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற SDPI 3.0 என்ற பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட 725 அணிகளுக்குள் 153 அணிகள் தேர்வு செய்யப்பட்டது. kanchipuram govt school students get first two prize

அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது புதிய அறிவியல் கண்டுபிடிப்பிற்காக முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றனர்.

ADVERTISEMENT

முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கடலில் பயணம் செய்பவர்கள் மற்றும் மீனவர்களுக்காக பாதுகாப்பு பெல்ட் உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர்.

இந்த பெல்ட்டை அணிந்திருப்பதன் மூலம் ஒருவர் நீழ்கி மூழ்காமல், அவரால் உயிர் தப்பிக்க முடியும் என்கின்றனர். இந்த கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அதேபோன்று சிறுகளத்தூர் அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவிகள், தங்களுக்கு வகுப்பெடுக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சந்திக்கும் பிரச்சனைகளை கண்டு, அவருக்கு உதவும் வகையில் எதிரில் உள்ள பொருட்கள் மற்றும் சரியான பாதையில் பயணிக்க உதவும் வகையில் சென்சார் தொப்பியை கண்டுபிடித்துள்ளனர்.

தொப்பியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் நடக்கும் பாதையில் உள்ள பொருட்கள் குறித்து உரையாடலாக பார்வையற்றவர்களுக்கு தெரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT


இந்த நிலையில் தங்களது கண்டுபிடிப்பிற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முதல் பரிசு பெற்ற முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகளை ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share