தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். தெரு நாய்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர்-3) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தெரு நாய்கள் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், ” தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் கழுதையை எங்க காணோம் என்று யாராவது கவலைப்படுகிறார்களா.. கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. அதை நாம் இப்போது பார்ப்பதே இல்லையே..கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் எனது கருத்து” என தெரிவித்துள்ளார்.