ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ‘இம்பீச்மென்ட்’ நெருக்கடியில் நீதிபதி ஜிஆர் சுவாமிநான்- வரிந்து கட்டிய திமுக- டெல்லியில் பரபரப்பு!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும் டெல்லி தகவலுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

டெல்லியில் இருந்து என்ன தகவல்?

ADVERTISEMENT

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறார்.

சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

ADVERTISEMENT

அண்மையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரத்தில் ஜிஆர் சுவாமிநாதன் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கப்பட்டன.

ஆமாம்..

ADVERTISEMENT

இப்படி ஒருதலைபட்சமாக ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்குவதாலும் கருத்துகளை தெரிவிப்பதாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வைக்க டெல்லியில் திமுக களமிறங்கி இருக்கிறது.

திமுக என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஜிஆர் சுவாமிநாதனின் பாரபட்சமான தீர்ப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றை விவரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களிடம் திமுக கையெழுத்து வாங்கியது.

திமுக முன்னெடுத்த இந்த முயற்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் 100-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.

இதை யாருக்கு அனுப்ப போகிறார்கள்?

ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கும் அனுப்ப இருக்கிறது திமுக

திமுகவின் கோரிக்கை என்ன?

ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த முயற்சிகளின் நோக்கம்..

ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிகை பாயுமா?

ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக வேறு ஒரு ஆயுதத்தை எடுக்கப் போகிறது. அந்த ஆயுதத்தின் பெயர்தான் ‘இம்பீச்மென்ட்’ எனும் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வருவது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரை பதவி நீக்க வகை செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை திமுக கொண்டு வருமாம்.. இந்த தீர்மானத்தை ‘இந்தியா கூட்டணி’ எம்.பிக்கள் ஆதரிக்கக் கூடும். இதனால் நடவடிக்கை பாயுமா? இம்பீச்மென்ட் தீர்மானம் வருமா? என்கிற நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் ஜி.ஆர். சுவாமிநாதன் என டைப் செய்தபடி சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share