அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக 150 வேட்பாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட கூட்டணி கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
