மதுரையில் அமையவிருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சார்பில், பல்வேறு பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு (Jobs) வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
இதில்
- பேராசிரியர்
- கூடுதல் பேராசிரியர்
- இணைப் பேராசிரியர்
- உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 84 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பேராசிரியர் பதவிக்கு மட்டும் 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கியத் தேதிகள் மற்றும் விண்ணப்ப முறை:
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த அக்டோபர் 25, 2025 அன்று தொடங்கியது. தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் நவம்பர் 24, 2025 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை டிசம்பர் 1, 2025 மாலை 4:30 மணிக்குள் பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் AIIMS மதுரையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiimsmadurai.edu.in மூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.
தகுதி மற்றும் வயது வரம்பு:
பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 அல்லது NMC-யால் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய துறையில் முதுகலை மருத்துவப் பட்டம் (MD/MS) பெற்றிருக்க வேண்டும்.
பேராசிரியர் பதவிக்கு 14 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம். அதிகபட்ச வயது வரம்பு 58 ஆண்டுகள் ஆகும்.
மத்திய அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும், பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கு (SC/ST) 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
காலியிடங்கள் உள்ள முக்கியத் துறைகள்:
மயக்கவியல், உயிர்வேதியியல், இருதயவியல், மார்பு மற்றும் இருதய ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, சமூக மற்றும் குடும்ப மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோய், இஎன்டி, நாளமில்லா சுரப்பி மருத்துவம், தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல், காஸ்ட்ரோஎன்டரோலஜி (மருத்துவம்), பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், நுண்ணுயிரியல், நியோனட்டாலஜி, நெப்ரோலஜி, நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, அணுக்கரு மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், எலும்பியல், குழந்தை மருத்துவம், நோயியல், மருந்தியல், உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு, மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், கதிரியக்க நோய் கண்டறிதல், கதிரியக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை காஸ்ட்ரோஎன்டரோலஜி, அறுவை சிகிச்சை புற்றுநோயியல், ரத்த மாற்று மருத்துவம் மற்றும் ரத்த வங்கி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை, சிறுநீரகவியல் போன்ற பல்வேறு மருத்துவத் துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன.
ஊதிய விவரங்கள் மற்றும் தேர்வு முறை:
தேர்ந்தெடுக்கப்படும் பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக லெவல்-14A-ன் கீழ் ₹1,68,900 முதல் ₹2,20,400 வரை வழங்கப்படும்.
கூடுதல் பேராசிரியர்களுக்கு லெவல்-13A2+ (₹1,48,200 – ₹2,11,400)
இணைப் பேராசிரியர்களுக்கு லெவல்-13A1+ (₹1,38,300 – ₹2,09,200)
உதவிப் பேராசிரியர்களுக்கு லெவல்-12 (₹1,01,500 – ₹1,67,400) என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ₹1500 ஆகும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் ₹500 செலுத்த வேண்டும்.
தேர்வு செயல்முறை:
ஆன்லைன் தேர்வு/நேர்காணல் மற்றும் AIIMS மதுரை விதிகளின்படி பிற சோதனைகளின் அடிப்படையில் இருக்கும்.
மதுரை எய்ம்ஸ் வளாகம் மற்றும் தொடர்பு விவரங்கள்:
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்காலிக வளாகம் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், நிரந்தர முகவரி தோப்பூர், ஆஸ்டின்பட்டி, மதுரை – 625 017 என்ற முகவரியிலும் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) நிறுவனம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழிகாட்டி நிறுவனமாகச் செயல்படுகிறது.
இத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை அலுவலக உதவி மையம்: 0452-24811099, இராமநாதபுரம் அலுவலக உதவி மையம்: 04567-299769 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
அத்துடன், academics-aiimsm@aiimsmadurai.edu.in, aiimsmaduraiadmn@gmail.com, it-aiimsm@aiimsmadurai.edu.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.
அறிவிக்கை முழு விவரம்:
