சனிகளில் எத்தனையோ விதமான சனி இருக்கு. அப்படி எல்லா சனியும் ஒன்று சேர்ந்த உருவம் சீமான் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
சி.பா. ஆதித்தனாரின் 121வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (செப்டம்பர் 27) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அவரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “எப்போதுமே நட்பை மதிக்கிறவர்கள் நாங்கள். ஆனால் மறைந்த தலைவர்களை பற்றி விமர்சனம் செய்யும் போது பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி ப்
ஏன் அடிக்கடி சீமான் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை. சிலருக்கு நாக்குல சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி என சனிகளில் எத்தனையோ விதமான சனி இருக்கு. அப்படி எல்லா சனியும் ஒன்று சேர்ந்த உருவம்தான் சீமான் தான்.
அவர் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய பதிலடி கடுமையாக இருக்கும். இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும். அந்த ஈனச்செயலில் ஈடுபடுவது நல்லதல்ல” என ஜெயக்குமார் பேசினார்.