விஜய் வேலூர் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை குறித்து பேசியதில் தொடங்கி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்த ஜூலி தொடர்ச்சியாக விஜயை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் தவெக பெண் தொண்டர்கள் குறித்து கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததையும் விமர்சித்து இன்று (மார்ச் 28) வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னண்ணே? டிஜிபி ஆபிஸ்ல எல்லாம் போய்க் புகார் கொடுத்தீங்க போல இருக்கு. நம்ம அதெல்லாம் கொடுக்கலாமாண்ணே? நம்ம இப்படி ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு இதெல்லாம் கொடுக்கிற அளவுக்கு நம்ம வொர்தா? யோசிக்க வேணாமா? சரி அதான். உன் ஆளுங்க ஒரு மினி எப்ஸ்டீன் பைல்ஸ் நடத்திட்டு இருக்கான்களே.. ஒரு பொண்ணு ஆசையா உன்கூட போட்டோ எடுத்துக்கணும்ன்ற ஆசையோடு வந்தா.. அத பண்ணிடலாம்ற அளவுக்கு ஒரு கூட்டத்தை வளர்த்து வச்சிருக்கல.
கண்டிப்பா இதெல்லாம் உனக்குத் தெரியும்லண்ணே. ஏன்னா நீதான் வந்து vulgar warriors.. sorry.. virtual warriors நீங்கப் பண்றது எல்லாத்தையும் பார்க்கிறேன். நல்லா பண்றீங்க அப்படின்னு சொன்னல்லண்ணே. சரி இது ஒரு ஜனநாயக நாடு. ஒரு புது ஆள் வந்தா இன்னும் நிறைய மக்கள் அரசியல் வயப்படுவாங்க அப்படின்னு ஒரு சாப்ட் கார்னர் உன் மேல இருந்துச்சுண்ணே.
ஆனா அல்ரெடி உன் கட்சியில யாரும் ஜெயிக்கமாட்டாங்க. நீ கூட அந்த stardom-அ வச்சு ஜெயிச்சிரக்கூடாதுண்ணே. நீ எந்தத் தொகுதியில நிக்கிறேன்னு மட்டும் சொல்லு. நான் அங்கதான் அண்ணே டேரா. நான் இறங்கி நின்னு அங்க பிரச்சாரம் பண்ணுவேன். பெண்களுக்கு எந்த அளவுக்கு உன் கட்சியில பாதுகாப்பு இருக்குன்றத பத்தி நான் பிரச்சாரம் பண்ணுவேன். சீக்கிரம்ண்ணே. சீக்கிரம் announce பண்ணு. I am waiting. நான் வரண்ணே.” என்று தெரிவித்துள்ளார்.
