விஜயின் ஜல்லிக்கட்டு காளை பேச்சுக்கு ‘ஜல்லிக்கட்டு’ ஜூலி கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

வேலூர் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று (பிப்ரவரி 23) விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஜல்லிக்கட்டு காளையை புல்லுக்கட்டை காட்டி ஒரு சின்ன பையன் அடக்கினான் என்றும் அந்த சின்னப்பையன் தான் டிவிகே என்றும் ஒரு குட்டி கதையை சொன்னார்.

இது குறித்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்த ஜூலி வெளியிட்டுள்ள வீடியோவில்,
“அண்ணா, இப்போதுதான் உங்கள் வேலூர் பரப்புரையைப் பார்த்தேன். வழக்கம்போல் இந்தப் பரப்புரையிலும் ஒன்றும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்த ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு குட்டி ஸ்டோரி சொல்லியிருக்கிறீர்கள். அதைக் கேட்ட பிறகு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.நீங்கள் போகிற போக்கில், ‘ஜல்லிக்கட்டு காளை நின்றது, அதற்கு புல்லுக்கட்டை காண்பித்து ஒரு குழந்தை கூட்டிச் சென்று ஓரமாக விட்டது’ என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய கட்சியில் இருக்கும் பாதி பேர் மைனர் ஆட்கள். ‘நானும் போய் புல்லுக்கட்டை காட்டுகிறேன்’ என்று சொல்லி ஏதாவது ஒன்று கிடைக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன அண்ணா பண்ணுவது? 50-50 ஆகவே இருக்கட்டும், 500 ஆக்கி விடாதீர்கள்.

ADVERTISEMENT

கஷ்டப்பட்டு எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு அனுமதி வாங்கி வைத்துள்ளோம். இன்று அது முறையாக நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ரசிகர்கள் போய் புல்லுக்கட்டை காண்பித்து ஏதாவது ஆகிவிட்டால், திரும்பி எல்லாம் போராட இங்கு யாருக்கும் திராணி இல்லை. அண்னே, கொஞ்சம் பார்த்து பக்குவமாகப் பண்ணு அண்னே. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போயிடாத அண்னே” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share