கோடைக் காலத்தில் இரும்புச் சத்து (Iron) குறைபாடு ஏற்படாமல் தடுக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
கோடைக்காலத்தில் பலரும் சோர்வு, பலவீனம் மற்றும் ரத்த சோகை அறிகுறிகள் பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு இரும்புச் சத்து குறைபாடு கூட ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம். இரும்புச் சத்து என்பது உடலுக்கு ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யவும், ஆற்றல் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
ஆகவே, கோடையில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தினமும் உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள வகைகளை சேர்த்துக்கொண்டாலே போதும். இது உடலை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வெந்தயம்:
வெந்தயத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதோடு, இவை ஹீமோகுளோபின் (improve haemoglobin levels) அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. வெந்தயத்தில் (fenugreek benefits) சுமார் 5.6 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சோகையை தவிர்க்க உதவும். வெந்தயத்தை காய்கறிகள், பருப்பு வகைகள், குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். இரும்புச் சத்து அதிகரிப்பைத் தாண்டி வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலை உள்ளிருந்து பலப்படுத்துகிறது.
முருங்கைக்காய்:
முருங்கைக்காய் இரும்புச் சத்து நிறைந்துள்ள மற்றொரு சத்துமிக்க உணவு. ஒரு நறுக்கப்பட்ட ஒரு முருங்கைக் காயில் (nutritious rich Drumstick) சுமார் 4 மி.கி இரும்புச் சத்து உள்ளது. முருங்கை கீரைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்படுத்துகிறது. முருங்கைக் காயை குழம்பு, சூப், பொறியல் அல்லது பொடி வடிவில் சாப்பிடலாம். இது அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்கி சோர்வை குறைக்க உதவுகிறது.
நெல்லிக்காய், எலுமிச்சை:
வைட்டமின் சி உடன் இணைந்தால் இரும்புச் சத்து என்பது உடலில் மிகவும் சிறப்பாக செயல்படும். வைட்டமின் சி என்பது உடல் இரும்புச் சத்தை உறிஞ்ச உதவுகிறது. எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் அதிகளவில் வைட்டமின் சி (vitamin C foods) உள்ளது. நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடலாம். அதேபோல நாம் சாப்பிடும் சாலட்களில் எலுமிச்சையை பிழிந்து விடுட்டு சாப்பிடலாம். அல்லது எலுமிச்சை சாறு குடிப்பது உடலுக்கு நன்மை அளிப்பதோடு புத்துணர்வையும் வழங்குகிறது.
மாதுளை, பீட்ரூட்:
மாதுளை மற்றும் பீட்ரூட் ஆகியவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவற்கும் (Improves blood circulation), ஹார்மோன் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. மாதுளை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பீற்றூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு பலவீனம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகளை நீக்க உதவுகிறது. பெண்களின் ஹார்மோன் சமநிலையை பராமைர்க்க இவை உதவி புரிகின்றன.
எள், பேரீச்சம்பழம்:
எள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற உணவுகள் இருப்புச் சத்து (iron level) அளவை அதிகரிக்க உதவுகின்றன. எள்ளில் இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் உடலை வலுப்படுத்தும் மற்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சம்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், சோர்வை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலை வறுத்த எள்ளுடன் 2 – 3 பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவது இரும்புச் சத்து குறைபாட்டை நீக்க உதவும்.
