ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழக டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
ஓய்வுபெறும் 6 மாதத்துக்குள் இருக்கும் யாரையும் டிஜிபி யாக நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலையில் பிரமோத் குமார் வரும் செப்டம்பர் மாதம் பதவி ஓய்வு பெற உள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.