ஐபிஎல் தொடக்கவிழா மற்றும் முதல் போட்டி நடைபெற உள்ள கொல்கத்தாவில் இன்று (மார்ச் 22) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ipl first match will be cancelled by rain
இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இதில் பிரபல பாலிவுட் ஜோடியான ஷர்தா கபூர் மற்றும் வருண் தவான் ஆகியோர் இணைந்து நடனமாட உள்ளனர். அதுமட்டுமின்றி பிரபல பாப் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், பஞ்சாப் பாப் பாடகர் கரண் அஜ்லர், பிரபல பின்னணி பாடகர் ஆர்ஜித் சிங் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த சீசனுக்கான முதல் போட்டியில் ரஹானே தலைமையிலான நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி.

மிரட்டும் மழை! ipl first match will be cancelled by rain
இதற்கிடையே தான் ’குறுக்கே இந்த கவுசிக் வந்தா?’ என்பது போல திடீரென ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இரவு முதல் மழைபெய்து வருகிறது. இதனால் இரு அணிகளும் நேற்று பயிற்சி செய்யவில்லை.
இந்த நிலையில் கொல்கத்தாவில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் (90%) என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கியுள்ளது.
அதன்படி இன்று மழை பெய்தால் தொடக்கவிழா உட்பட முதல் போட்டியும் மொத்தமாக ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. இதனால் வருண பகவான் கருணைக் காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.