இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள்! 10ஆவது, 12ஆவது, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

iocl south region apprentice recruitment 2026 technician deo jobs

“கையில டிகிரி இருக்கு, டிப்ளமோ இருக்கு… ஆனா முன் அனுபவம் (Experience) இல்லைனு வேலை தர மாட்டேங்கிறாங்களே!” என்று புலம்பும் இளைஞரா நீங்கள்? கவலையை விடுங்க. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOCL) பயிற்சி பெறும் பொன்னான வாய்ப்பு உங்கள் வாசலைத் தட்டியிருக்கிறது.

இந்தியன் ஆயில் நிறுவனம், தென் மண்டலப் பிரிவில் (Southern Region) காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் மகிழ்ச்சி!

என்னென்ன வேலைகள்? மொத்தம் மூன்று விதமான பிரிவுகளில் ஆட்கள் எடுக்கிறார்கள்:

ADVERTISEMENT
  • டெக்னீசியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice): இது டிப்ளமோ முடித்தவர்களுக்கானது.
  • ட்ரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentice): இது ஐடிஐ (ITI) முடித்தவர்களுக்கானது. (பிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக் போன்றவை).
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO): இதற்கு 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்! (கம்ப்யூட்டர் அறிவு இருந்தால் சிறப்பு).

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ (Diploma in Engineering) மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி (BA/B.Sc/B.Com) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு).

சம்பளம் (Stipend) உண்டா? நிச்சயமாக! இது பயிற்சி காலம் என்றாலும், மாதம் தோறும் கணிசமான உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசின் அப்ரண்டிஸ் விதிகளின்படி இந்தத் தொகை இருக்கும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் மதிப்புமிக்க சான்றிதழ் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் எடுக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் https://iocl.com/apprenticeships என்ற இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நிறைய பேர் ‘இது அப்ரண்டிஸ் வேலைதானே… நிரந்தர வேலை இல்லையே’னு அலட்சியமா விட்டுடுவாங்க. ஆனா, ஐஓசிஎல் (IOCL) மாதிரி ஒரு ‘மஹாரத்னா’ கம்பெனியில நீங்க ஒரு வருஷம் பயிற்சி எடுத்த சர்டிபிகேட் வெச்சிருந்தா, வெளியுலகத்துல அதுக்குத் தனி மரியாதை. அதுமட்டுமில்லாம, எதிர்காலத்துல ஐஓசிஎல்-ல நிரந்தர வேலைக்கான அறிவிப்பு வரும்போது, அப்ரண்டிஸ் முடிச்சவங்களுக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்பிருக்கு. குறிப்பா, 12ஆவது முடிச்சவங்க சும்மா இருக்காம இந்த DEO வேலைக்கு ட்ரை பண்ணுங்க. இது உங்க கேரியருக்கு ஒரு நல்ல ஸ்டார்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share