கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று (அக்டோபர் 16) கோவை மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஹோட்டல் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் ஹோட்டல் விடுதி மேலாளர்களுடன் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது ஹோட்டல்களில் தங்கி இருப்பவர்கள் குறித்த விபரங்களை ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அளிக்க வேண்டும்.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்து தங்குபவர்கள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் விபரங்கள் போலீஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வின் போது தவறாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.