“யூனிஃபார்ம் போட்டு கெத்தா நடக்கணும்… நாட்டுக்காக சேவை செய்யணும்…” என்று கனவு காணும் இளைஞர்களா நீங்கள்? ஆனால், “எழுத்துத் தேர்வு எழுத கஷ்டமா இருக்கே” என்று ஃபீல் பண்ணுறீங்களா?
கவலையை விடுங்க! தேர்வு எழுதாமலேயே இந்திய ராணுவத்தில் அதிகாரியாக (Officer) சேர ஒரு அருமையான வாய்ப்பு தேடி வந்திருக்கு. இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இந்திய ராணுவம் விரித்துள்ளது சிவப்பு கம்பளம்!
யார் கூப்பிடுறாங்க? இந்திய ராணுவத்தின் ‘ஷார்ட் சர்வீஸ் கமிஷன்’ (SSC Technical) பிரிவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அதிகாரிகளைத் தேர்வு செய்ய இப்போது அறிவிப்பு வந்துள்ளது. இது 66-வது SSC (Men) மற்றும் 37ஆவது SSC (Women) பேட்ச் ஆகும்.
என்னென்ன ஹைலைட்ஸ்? மொத்த காலியிடங்கள்: 381.
- ஆண்கள்: 350
- பெண்கள்: 29
- விதவைகள் பிரிவு (Widows of Defence Personnel): 2 (Tech & Non-Tech)
யார் விண்ணப்பிக்கலாம்?: சம்பந்தப்பட்ட துறையில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
- முக்கியமான விஷயம்: தற்போது ஃபைனல் இயர் (Final Year) படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். (ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் டிகிரி முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்).
வயது வரம்பு என்ன? இளைஞர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு!
- வயது: 20 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அதாவது, நீங்கள் 02 அக்டோபர் 1999க்கு முன்போ அல்லது 01 அக்டோபர் 2006க்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது.
சம்பளம் சும்மா தாறுமாறு! வேலையில் சேர்ந்தவுடன் ‘லெப்டினன்ட்’ (Lieutenant) பதவி கிடைக்கும்.
- சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை.
- இது போக, ராணுவ அதிகாரிகளுக்கான பிரத்யேக அலவன்ஸ், மருத்துவ வசதி, கேண்டீன் வசதி எனச் சலுகைகள் கொட்டிக்கிடக்கின்றன!
தேர்வு முறை (Selection Process): “இங்கேதான் ட்விஸ்ட் இருக்கு!”
- எழுத்துத் தேர்வு கிடையாது: நீங்கள் அப்ளிகேஷனில் கொடுக்கும் இன்ஜினியரிங் மதிப்பெண்களை வைத்து ‘ஷார்ட்லிஸ்ட்’ (Shortlist) செய்வார்கள்.
- SSB இன்டர்வியூ: ஷார்ட்லிஸ்ட் ஆனவர்களுக்கு 5 நாட்கள் நடக்கும் SSB நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் உங்கள் ஆளுமைத்திறன் (Personality), நுண்ணறிவு (Intelligence) மற்றும் உடல்தகுதி சோதிக்கப்படும்.
- மெடிக்கல் டெஸ்ட்: இதில் பாஸ் ஆனால், ராணுவ அதிகாரி வேலை உறுதி!
ராணுவ வேலைனா சும்மாவா? பிளான் பண்ணி அடிங்க!
- கட்-ஆஃப் முக்கியம்: தேர்வு இல்லாததால், உங்கள் இன்ஜினியரிங் செமஸ்டர் மார்க்கை வைத்துதான் அழைப்பார்கள். அதனால், மார்க் பர்சண்டேஜ் (Percentage) அதிகமாக இருப்பது அவசியம்.
- SSB தான் மெயின்: சும்மா கேள்வி பதில் இன்டர்வியூ மாதிரி இது இருக்காது. குரூப் டிஸ்கஷன், பிசிக்கல் டாஸ்க் எல்லாம் இருக்கும். யூடியூபில் “SSB Interview Tips” வீடியோக்களைப் பார்த்து இப்போதே தயாராகுங்கள்.
- கடைசி தேதி: ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 5, 2026 தான் கடைசி நாள். கடைசி நேரத்தில் சர்வர் பிஸியாகிவிடும், உடனே joinindianarmy.nic.in தளத்தில் அப்ளை பண்ணுங்க.
நாட்டுக்குச் சேவை செய்ய நினைக்கும் இன்ஜினியர்களுக்கு இது ஒரு கோல்டன் சான்ஸ். மிஸ் பண்ணிடாதீங்க!
