பாகிஸ்தான் பொருட்களுக்கு முற்றிலுமாக இந்தியா தடை விதித்துள்ளது. India next move against Pakistan
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில், சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறித்தியது. இந்திய விமானங்களுக்கான வான்வழியை பாகிஸ்தான் மூடியது. இருநாட்டு தூதர்களுக்கும் இரு நாடுகளும் மாறி மாறி சம்மன் அனுப்பின.
இந்தசூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பாகிஸ்தான் பொருட்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய இந்தியா இன்று (மே 3) தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (FTP) 2023 ன் படி, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. India next move against Pakistan
இதில் விதிவிலக்கு ஏதேனும் தேவைப்பட்டால், மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரி வித்தது. 2024-25 தரவுகள் படி இந்தியாவின் இறக்குமதியில் 0.001 சதவிகிதம்தான் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டு வரும் நிலையில், அது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதுபோன்று இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. India next move against Pakistan