“பேங்க் வேலைன்னாலே பிஓ (PO) அல்லது கிளர்க் மட்டும்தானா? கொஞ்சம் வித்தியாசமா, அதே சமயம் கைநிறையச் சம்பளம் கிடைக்கிற மாதிரி வேலை இல்லையா?” என்று தேடிக்கொண்டிருக்கும் எம்பிஏ பட்டதாரிகளே… இதோ உங்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான ‘எக்ஸிம் பேங்க்’ (India Exim Bank), 2026-ம் ஆண்டிற்கான ‘மேனேஜ்மெண்ட் டிரெய்னி’ (Management Trainee) பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “சாதாரண பேங்க் வேலை வேண்டாம், ஒரு பிரீமியம் லைஃப் ஸ்டைல் வேணும்”னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பு.
காலியிடங்கள் எத்தனை? மொத்தம் 40 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று மலைக்க வேண்டாம். இதற்கான தகுதிகள் ஸ்பெஷலானது என்பதால், போட்டியும் ஐபிபிஎஸ் (IBPS) அளவுக்கு இருக்காது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்த வேலைக்கு வெறும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (MBA) அல்லது பிஜிடிபிஏ (PGDBA) முடித்திருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக Finance அல்லது International Business பாடப்பிரிவில் ஸ்பெஷலைசேஷன் செய்திருக்க வேண்டும்.
- சிஏ (CA): சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் முடித்தவர்களும் இதற்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு: 21 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு).
சம்பளம்… அதான் ஹைலைட்! வேலைக்குச் சேர்ந்த முதல் ஒரு வருடம் பயிற்சி காலம். அந்தப் பயிற்சியின் போதே உங்களுக்கு மாதம் ரூ.65,000 உதவித்தொகையாக (Stipend) வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும், ‘துணை மேலாளர்’ (Deputy Manager) ஆகப் பதவி உயர்வு கிடைக்கும். அப்போது உங்களின் ஆண்டுச் சம்பளம் (CTC) சுமார் ரூ.17 லட்சம் வரை இருக்கும்!
தேர்வு முறை:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு (பிப்ரவரி 2026ல் நடைபெறும்).
- நேர்காணல் (Interview).
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் www.eximbankindia.in/careers என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி/எஸ்டி மற்றும் பெண்களுக்கு ரூ.100.
- கடைசி தேதி: பிப்ரவரி 1, 2026.
சாதாரணமா பேங்க் எக்ஸாம் எழுதுறவங்க இங்கிலீஷ், ஆப்டிட்யூட் மட்டும்தான் படிப்பாங்க. ஆனா, எக்ஸிம் பேங்க் தேர்வைப் பொறுத்தவரை ஃபைனான்ஸ் மற்றும் டிரேட் (Trade) சம்பந்தப்பட்ட கேள்விகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். எம்பிஏ ஃபைனான்ஸ் முடிச்சவங்க, உங்க சப்ஜெக்ட் நாலேட்ஜை கொஞ்சம் தூசு தட்டுங்க… இந்த வேலை உங்களைத்தான் தேடுது!
