“வெளிநாட்டுல படிக்கணும், வேலை பார்க்கணும்னு ஆசை… ஆனா விசா (Visa) வாங்குறதுக்குள்ள தாவு தீர்ந்துடுதே!” என்று புலம்பும் இந்திய இளைஞர்களுக்கு, ஒரு ஜாக்பாட் செய்தி வந்திருக்கிறது. அமெரிக்கா, கனடாவையே சுற்றிச் சுற்றி வந்த நம்ம ஊர் பசங்க, இனி தைரியமா ஐரோப்பா (Europe) பக்கம் வண்டியை விடலாம்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இடம்பெயர்வு மற்றும் மொபிலிட்டி ஒப்பந்தம்’ (Migration and Mobility Partnership Agreement) கையெழுத்தாகியுள்ளது. இது சும்மா பேப்பரோட நிக்கிற ஒப்பந்தம் இல்லை; இந்திய மாணவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் ஐரோப்பாவின் கதவுகளை அகலத் திறந்துவிடும் ஒரு ‘கோல்டன் கீ’ (Golden Key)!
மாணவர்களுக்கு என்ன லாபம்? இனிமேல் “சீட் லிமிடெட்” (Limited Seats) என்ற பேச்சுக்கே இடமில்லை.
- அன்லிமிடெட் விசா: இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் எந்த உச்சவரம்பும் இருக்காது (Uncapped Mobility) என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
- படிப்பு முடிஞ்சா வேலை: அங்க படிச்சு முடிச்சவுடனே, “ஊருக்குக் கிளம்பு”னு சொல்ல மாட்டாங்க. வேலை தேடுவதற்காகவே 12 மாதங்கள் (1 வருடம்) விசா நீட்டிக்கப்படும்.
- டிகிரிக்கு மரியாதை: இந்தியாவில் வாங்கிய டிகிரியை, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கும். இதனால் மேற்படிப்புக்குச் சேர்வது ஈஸியாகிவிடும்.
வேலை தேடுவோருக்கு என்ன ஸ்பெஷல்? ஐரோப்பாவில் வேலைக்குச் சேர விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதற்காகவே பிரத்யேகமாக ‘லீகல் கேட்வே ஆபீஸ்’ (Legal Gateway Office) ஒன்று இந்தியாவில் திறக்கப்பட உள்ளது.
- இது ஒரு ‘வேலைவாய்ப்புத் தரகர்’ மாதிரி செயல்படும். ஐரோப்பிய கம்பெனிகளில் என்னென்ன வேலை காலியாக உள்ளது? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? விசா நடைமுறைகள் என்ன? என்பதை இங்கிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
- ஆரம்பத்தில் ஐடி (ICT) துறை சார்ந்தவர்களுக்குத் தான் முதல் மரியாதை! பிறகு மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
விசா நடைமுறையில் மாற்றம்: ஷெங்கன் விசா (Schengen Visa) வாங்குவதில் இருந்த சிக்கல்கள் குறைக்கப்பட்டு, எல்லாம் டிஜிட்டல் மயமாகப் போகிறது. இனி விசா ஆபிஸ் வாசலில் நீண்ட நேரம் தவம் கிடக்க வேண்டியதில்லை.
ஐரோப்பான்னவுடனே நமக்கு லண்டன், பாரிஸ் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, ஜெர்மனி, போலந்து, அயர்லாந்து போன்ற நாடுகள்ல இந்தியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறாங்க. அங்க வேலை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கு. அமெரிக்காவுல விசா கெடுபிடி அதிகமாகுற இந்த நேரத்துல, ஐரோப்பா ஒரு நல்ல மாற்று. ஆங்கிலம் தவிர்த்து, ஜெர்மன் அல்லது பிரெஞ்சு மொழியில அடிப்படை பேசக் கத்துக்கிட்டா, சம்பளத்துல இன்னும் ரெண்டு பூஜ்ஜியம் எக்ஸ்ட்ரா சேரும் பாஸ்! இப்போவே பாஸ்போர்ட்டைத் தூசி தட்டுங்க!
