இளம் வீரரைப் பார்த்து கோபமாகக் கத்திய ரோஹித்… உண்மையில் என்ன நடந்தது?

Published On:

| By Manjula

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி2௦ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-௦ என முன்னிலை வகிக்கிறது.

ஜனவரி 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி2௦ போட்டியில் கில்லின் கவனக்குறைவால், கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

ADVERTISEMENT

இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கிய ரோஹித் ரன் எதுவும் எடுக்காமலேயே விக்கெட்டை இழந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் முதல் ஓவரின் இரண்டாவது பந்தினை தட்டிவிட்டு ரோஹித் சிங்கிள் எடுக்க ஓடிவருகிறார்.

ஆனால்  பீல்டரையே பார்த்துக்கொண்டு கில் ஓடாமல் கோட்டை விட்டுவிட்டார். இதனால் ரோஹித் ரன் அவுட் ஆனார். அவர் ரன் அவுட் ஆகி வெளியேறும்போது கில்லை பார்த்து, ”இது நன்றாக இல்லை” என கோபமாகத் திட்டிவிட்டு சென்றார்.

ADVERTISEMENT

அப்போது வர்ணனையாளர்களும், ”ரோஹித் மீது தவறில்லை. கில் கவனக்குறைவாக இருந்து விட்டார்” என தெரிவித்தனர்.

https://twitter.com/shubhamchand768/status/1745465946972750202

ஏற்கனவே ஐபிஎல் தவிர வேறு போட்டிகளில் பெரிதாக ஸ்கோர் செய்வதில்லை என, கில் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

முன்பு போல இல்லாமல் புதிது, புதிதாக வீரர்கள் வந்து கொண்டே இருப்பதால், கில் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இதுபோன்ற தவறுகளை அவர் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி2௦ போட்டி இன்று( ஜனவரி 14) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரையும் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா… 2வது, 3-வது இடங்கள் யாருக்கு?

பொங்கல் பண்டிகை: முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share