இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கான உடனடி கட்டண சேவை (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. தேசிய கட்டண கழகம் (NPCI) வழங்கும் IMPS எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒரு உடனடி பணப் பரிமாற்ற முறையாகும்.
இதன் மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரை அனுப்ப முடியும். SMS மற்றும் IVR சேவைகள் தவிர்த்து மற்ற வழிகளிலும் இந்த வசதி உள்ளது.
பிப்ரவரி 15 முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி விதிக்கும் IMPS கட்டண விவரங்கள் இதோ:
ரூ.1,000 வரை அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் மற்றும் வங்கி கிளைகள் இரண்டிலும் எந்த கட்டணமும் இல்லை. இது பழைய மற்றும் புதிய கட்டண முறைகளிலும் அப்படியே உள்ளது.
ரூ.1,000-க்கு மேல் ரூ.10,000 வரை அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பினால் கட்டணம் இல்லை. ஆனால், வங்கி கிளைகள் மூலம் அனுப்பினால் ரூ.2 + GST கட்டணம் வசூலிக்கப்படும். இது பழைய மற்றும் புதிய கட்டண முறைகளிலும் ஒரே மாதிரியாக உள்ளது.
ரூ.10,000-க்கு மேல் ரூ.25,000 வரை அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பினால் கட்டணம் இல்லை. வங்கி கிளைகள் மூலம் அனுப்பினால் ரூ.4 + GST கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் பழைய மற்றும் புதிய கட்டண முறைகளில் மாற்றம் இல்லாமல் உள்ளது.
ரூ.25,000-க்கு மேல் ரூ.1,00,000 வரை அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பினால் ரூ.2 + GST கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி கிளைகள் மூலம் அனுப்பினால் ரூ.4 + GST கட்டணம் வசூலிக்கப்படும். இங்கு ஆன்லைன் கட்டணம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,00,000-க்கு மேல் ரூ.2,00,000 வரை அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பினால் ரூ.6 + GST கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி கிளைகள் மூலம் அனுப்பினால் ரூ.12 + GST கட்டணம் வசூலிக்கப்படும். ஆன்லைன் கட்டணம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.2,00,000-க்கு மேல் ரூ.5,00,000 வரை அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பினால் ரூ.10 + GST கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி கிளைகள் மூலம் அனுப்பினால் ரூ.20 + GST கட்டணம் வசூலிக்கப்படும். இங்கும் ஆன்லைன் கட்டணம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
