ஈரான் – இஸ்ரேல் மோதல்… இந்தியாவுக்கு புதிய தலைவலி!

Published On:

| By Minnambalam Desk

Impact of Iran-Israel conflict on India

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. Impact of Iran-Israel conflict on India

இரு தரப்பில் இருந்தும் கடுமையான பதிலடி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த மோதலால் உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

ஜூன் 13-ஆம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து, உலக அளவில் பங்குச்சந்தைகள் முதலில் பாதிக்கப்பட்டன. ஆனால், பின்னர் நிலைமை சரியாகிவிட்டது.

ஈரானின் முன்னணி இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதுடன், அணு தளங்கள், எரிசக்தித் துறையையும் தாக்கியது.

இதில் ஈரானின் தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு வயல் (Gas Field) தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் ஊடகம் தெரிவித்தது. Impact of Iran-Israel conflict on India

ஈரான் தரப்பில் இஸ்ரேல் தாக்குதலில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்தியது. Impact of Iran-Israel conflict on India

இதில் சில ஏவுகணைகள் மட்டுமே இஸ்ரேலின் பாதுகாப்பை தாண்டின. இந்த தாக்குதலில், 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Impact of Iran-Israel conflict on India

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளமான Truth Social தளத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், “தற்போது திட்டமிடப்பட்டுள்ள அடுத்த தாக்குதல்கள் இன்னும் மோசமாக இருக்கும். ஈரான் உடன்பாடு செய்துகொள்ள வேண்டும், இல்லையெனில் எதுவும் மிஞ்சாது,” என தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் ராணுவ சக்திகளாகிய இஸ்ரேலும் ஈரானும் நேரடியாக போருக்கு நகரும் நிலையில், நிதிச் சந்தைகள் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Impact of Iran-Israel conflict on Indiampact of Iran-Israel conflict on India

எண்ணெய் விலை நிலவரம் Impact of Iran-Israel conflict on India
Impact of Iran-Israel conflict on India

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் சூழலின் காரணமாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி காலை ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை $74.60 (6,436 ரூபாய்) உயர்ந்தது. இது ஜூன் 5-ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது சுமார் 7% அதிகம்.

உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பாலான பகுதிகள் மத்திய கிழக்கு கடற்பாதைகளின் வழியாக Strait Of Hormuz கடந்து செல்கின்றன.

இந்த Strait Of Hormuz பகுதியானது ஈரானையும் வளைகுடா நாடுகளையும் பிரிக்கிறது. மேலும், அரேபிய கடல் இந்தப் பெருங்கடலை இணைக்கிறது.

இதன் வழியாக தினமும் சுமார் 2.1 கோடி பேரல் எண்ணெய் கடந்து செல்கிறது. இது உலகளவில் கடல் வழியாக அனுப்பப்படும் எண்ணெய்களின் மூன்றில் ஒரு பகுதி ஆகும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த கடல் பாதையின் அகலமான பகுதி 33 கிலோமீட்டர் மட்டுமே.

இதனால் கப்பல் போக்குவரத்து பாதைகள் இன்னும் குறுகலாக இருப்பதால் இந்தப் பாதையில் செல்லும் கப்பல்கள் தாக்குதல்களுக்கு நெருக்கமாக உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் மோதல் Strait Of Hormuz-ஐ ஈரான் மூடுமா? என்ற பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஈரானின் செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்மைல் கோசாரி அளித்த பேட்டியில் Strait Of Hormuz-ஐ மூடுவது குறித்து ஈரான் அரசு ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை Strait Of Hormuz மூடப்பட்டால்

Impact of Iran-Israel conflict on India

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 டாலர் (8,600 ரூபாய்) வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் 1980-88 ஈரான் – ஈராக் போர் காலத்தில் கூட Strait Of Hormuz முற்றிலும் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை Strait Of Hormuz மூடப்பட்டால் அது ஈரானுக்கே கடுமையான பொருளாதார பின் விளைவுகள் ஏற்படும்.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளால் ஈரான் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் Strait Of Hormuz மூடப்பட்டால் சீனாவுக்கு செல்லும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் ஈரானுக்கு மேலும் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும்.

உலகளவில் பணவீக்கத்தில் தாக்கம் உண்டா?

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உற்பத்தி துறையின் செலவுகள் அதிகரிக்கும். இதனால் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக உணவு, உடைகள், இரசாயனப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயரும்.

மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் பணவீக்க உயர்வு மற்றும் மந்தநிலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மத்திய வங்கிகளுக்கு வட்டிவீதியைக் குறைக்கும் நெறிமுறையில் சிரமம் ஏற்படலாம்.

G7 நாடுகள் தற்பொழுது வட்டி விகிதத்தை குறைக்கும் சுழற்சியில் உள்ளன. குறிப்பாக இங்கிலாந்து, அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 4.25% ஆக குறைத்துள்ளது.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனைத்து நாடுகளிலும் விதித்துள்ள சுங்க வரிகளை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் (US Federal Reserve) வட்டி விகிதத்தை குறைக்கவில்லை.

விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள்

ஈரான் மற்றும் இஸ்ரேலின் மோதலால் மத்திய கிழக்கில் பல நாடுகள் தங்களுடைய விமானங்களை நிறுத்தியுள்ளன. சில நாடுகள் வான்வழி முடக்கியுள்ளன.

இதனால் எமிரேட்ஸ்(Emirates) நிறுவனம் ஈராக், ஜோர்டான், லெபனான், ஈரான் விமான சேவைகளை ஜூன் 30 வரையும், எதிஹாட் ஏர்வேஸ்(Etihad Airways) நிறுவனம் அபுதாபி – தெல் அவீவ் சேவை மற்றும் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரான், ஈராக், சிரியா விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Impact of Iran-Israel conflict on India
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share