இந்தி திரையுலகில் மிக வெளிப்படையானவராக, மிகத் தைரியமானவராகக் குறிப்பிடப்படுகிற பெண் ஆளுமைகளில் ஒருவர் மலாய்கா அரோரா. ’உயிரே’ படத்தில் வரும் ‘தைய்ய தைய்யா’ பாடலில் ஷாரூக் கான் உடன் ஆட்டம் போட்ட நடிகை என்று சொன்னால் நம்மவர்களுக்குத் தெரியும்.
இவர், சல்மானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. சில மாதங்களுக்கு முன்பு வரை போனி கபூர் மகன் அர்ஜுனோடு இவர் வலம் வந்த புகைப்படங்கள் இணையதளங்களை ஆக்கிரமித்து வந்தன.
சமீபத்தில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழுக்கு மலாய்கா அளித்த பேட்டியில் தனது கடந்த காலம் மற்றும் இன்றிருக்கும் மனநிலை பற்றிப் பேசியிருக்கிறார்.
”இதுநாள் வரை என்னோட திரைப்பட வாய்ப்புகள், அணிகிற ஆடைகள், ரிலேஷன்ஷிப் இதையெல்லாம் வச்சுத்தான் நான் யார் என்பதை தீர்மானிச்சு வந்தது சமூகம்” என்றிருக்கிறார்.
”நான் என்ன செய்யணும்னு மத்தவங்க தீர்மானிக்கறதை ஏத்துக்கவே முடியாது. ஆனால், எப்போது சுயவிளக்கம் அளிப்பதை நிறுத்தினேனோ, அப்போது ரொம்பவே சுதந்திரமாக உணர்ந்தேன். அப்போதுதான் நீங்க உங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க என்பது தான் முக்கியம் எனப் புரிந்தது” என்று அந்த பேட்டியில் மலாய்கா சொல்லியிருக்கிறார்.
”இதுநாள் வரை நான் ரொம்பவே தைரியமானவளா, வெளிப்படையானவளா, எல்லாத்தையும் செய்றதுக்கும் தயாரா இருப்பவளா அறியப்படுறேன். இப்போ அது எல்லாம் எனக்கு மகுடம் மாதிரி இருக்குது. என்னைய யாராவது ‘டூமச்’னு நினைச்சாங்கன்னா, அவங்க எனக்கு போதுமானவங்களா இருக்க மாட்டாங்கன்னு புரிஞ்சு போச்சு.
உலகத்துக்காக நடிக்கிறதை நிறுத்திட்டு, உங்களுக்கான வாழ்க்கைய நீங்க வாழத் தொடங்குறபோது தான் உண்மையான தன்னம்பிக்கை என்னன்னு தெரியும். இப்போது அது எனக்கு கிடைச்சிருக்குது” என்று நிறையவே ‘தத்துவார்த்தமாக’ இந்த பேட்டியில் பேசியிருக்கிறார் மலாய்கா.