ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் பயங்கரம்… மனைவி உட்பட 2 தலைகளுடன் கணவர் போலீசில் சரண்!

Published On:

| By vanangamudi

Husband surrender with 2 heads including his wife

தனது இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததால், அவரையும் அவரது கள்ளக் காதலனையும் கழுத்தைத் துண்டித்து, 2 தலைகளுடன் கணவர் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கொளஞ்சி நேற்று (செப்டம்பர் 10) இரவு 9.30 மணியளவில் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு யாரும் இல்லை. அதனால் தனது மனைவியைத் தேடி வீட்டு மொட்டை மாடி சென்றருவருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

அங்கு மனைவி லட்சுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு இருவரும் ஒன்றாக இருந்ததைப் கண்டு கடும் ஆத்திரமடைந்தார் கொளஞ்சி. சற்றும் யோசிக்காமல் இரண்டு பேரின் கழுத்தையும் கொடூரமாக வெட்டி அங்கேயே உடலைப் போட்டுவிட்டு இரண்டு தலைகளையும் மட்டும் பையில் போட்டு எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

ADVERTISEMENT
கொலையான லட்சுமி, தங்கராசு மற்றும் கொலையாளி கொளஞ்சி

இதுகுறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் காவல்நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த உடல்களை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைப்பற்றி காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ADVERTISEMENT

கொலை செய்த கொளஞ்சி மீது ஏற்கனவே கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. அவர் கொலை செய்யும் விதம் எப்போதும் வித்தியாசமாக இருக்குமாம்.

தனது 2வது மனைவி லட்சுமியும், அப்பகுதியின் மன்மத ராசாவாக வலம் வந்த தங்கராசும் தொடர்பில் இருப்பதை அறிந்து ஏற்கெனவே இருவரையும் கண்டித்துள்ளார் கொளஞ்சி.

ஆனால் அதனை மீறியும் இருவரும் ஒன்றாக இருந்ததை கண்ட ஆத்திரத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உள்ள பயணித்து வேலூர் மத்திய சிறைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள சிறை காவலர்களிடம் கொலை பற்றி கூறியதும், ‘என்னது தலையை எடுத்து வந்திருக்கியா?‘ என மிரண்டு போனவர்கள், சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அருகில் உள்ள பாகாயம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீஸார் இரண்டு தலைககளுடன் கொளஞ்சியை கைது செய்து அழைத்து சென்றனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த வரஞ்சரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுக்கபட்டு அவர்களிடம் கொளஞ்சி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share