நாடக மேடை: காவல் நிலையம் முதல் ஊர் மயானம் வரையில்…!

Published On:

| By Minnambalam Desk

அ.குமரேசன்

ஒரு நாடகம் என்ன செய்துவிட முடியும்? முன்பு நாடகங்களே எங்கும் பரவியிருந்தன. திரைப்படங்கள் அவற்றைப் பின்னால் நிற்க வைத்தன. பின்னர், திரைப்படங்களைத் தொலைக்காட்சிகள் திகைத்து நிற்க வைத்தன. இன்று தொலைக்காட்சிகளைத் தயங்கி நிற்க வைப்பதாக இணையவழி ஊடகங்கள் விரிந்திருக்கின்றன. இந்தச் சூழலில் நாடகத்துக்கு இடம் எது?how stage derama suvive in digital era?

திரைப்படம், தொலைக்காட்சி, இணையவழி மேடைகள் ஆகியவற்றில் இல்லாத ஒன்றை, அவற்றின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் குறைத்து மதிப்பிடாமலே, நாடகத்தில் காண முடியும். அவையோர் முன் நேருக்கு நேராகத் தோன்றிப் பேச வல்லது நாடகம். அந்த இடத்திலேயே  அந்த நேரத்திலேயே அவையோர் எதிர்வினை ஆற்றுவதே கூட நாடகத்தின் அங்கமாகிவிட முடியும்.how stage drama suvive in digital era?

“ஒரு நாடகம் அவையோருக்கு ஆழமான உணர்வுகளைக் கிளற முடியும், அழுத்தமானதொரு கதையைச் சொல்ல முடியும், அதில் ஆழமான உள்ளடக்கங்களை வெளிப்படுத்த முடியும், சமூகக் கருத்தைக் கூறவும் பெறவும் முடியும், கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்த முடியும், உரையாடலும் நடிப்பும் காட்சிப் பொருள்களுமாகச் சேர்ந்து சிந்தனைவயப்படுத்த முடியும். ரத்தமும் சதையுமாய்க் கண்முன்பாகக் காணும் கலைஞர்களோடு சேர்ந்து கதையில் காட்டப்படும் வாழ்க்கையில் பயணிக்கவும், சமூகத்தை விமர்சிக்கவும் முடியும்.” how stage drama suvive in digital era?stage drain digital

நாடகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் இவ்வாறு கூறினேன். சரியாகத்தான் சொல்லியிருக்கிறோம் என்ற தற்பெருமிதம் கொஞ்சமாகவும், அப்படிப்பட்ட படைப்புகளை  அனுபவிக்கிறோம் என்ற பரவசம் மிகுதியாகவும் எற்படச் செய்தன அண்மையில் பார்த்த இரண்டு நாடகங்கள். சென்னை கலைக்குழு புதிதாக உருவாக்கியிருக்கும் ‘பட்டாங்கில் உள்ளபடி’, ‘நல்வழி’ ஆகியவையே அவை.how stage drama suvive in digital era?

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி”

–அவ்வை தமது இந்த ‘நல்வழி’ பாடலில், “மேல்சாதி, கீழ்சாதி என்று என்னென்னவோ  சொல்லிக்கொண்டு திரிகிறீர்களேடா, வறியவரைக் கண்டு உதவுகிறவர்கள் யாரோ அவர்கள் மேல்சாதி, மனதை மூடிக்கொள்கிறவர்கள் யாரோ அவர்கள் கீழ்சாதி, அவ்வளவுதான் போங்கடா,”  என்கிறார். “பட்டாங்கில் உள்ளபடி” என்று தன் கருத்துக்கு ஆதரவு சேர்க்கிறார்.

நீதி நூல்களைத்தான் அவர் பட்டாங்கு எனக் குறிப்பிடுவதாக ஒரு விளக்கம் உண்டு. அப்படித்தான் என்றால், சாதிப் பாகுபாடுகளை வலியுறுத்திய நூல்களை அவர் நீதி நூல்களாக ஏற்கவில்லை என்று புலனாகிறது. பட்டாங்கு என்றால் “இருக்கிற நிலைமை” என்றும் பொருளுண்டு என்ற கருத்தும் பகிரப்படுகிறது. அப்படிப் பார்த்தால் “சமூக வாழ்க்கை நிலவரத்தின்படி இரக்கமுள்ளோர் உயர்ந்தோர், இரக்கமற்றோர் தாழ்ந்தோர்” என்று அவர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.hhhow stage drama suvive in digital era?how stage drama suvive in digital era?oa?

அவ்வையின் ஒரு பாடல்,  அந்தப் பாடலில் உள்ள ஒரு சொற்றொடர் இரண்டையும் தலைப்பாகக் கொண்டு வந்துள்ள நாடகங்கள் என்ன சொல்கின்றன? எப்படிச் சொல்கின்றன?

ஒரு நாடகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் போல அடுத்த நாடகம் அமைந்திருக்கிறது. அதே வேளையில், அதைப் பார்த்தால்தான் இது புரியும் என்றில்லாமல், தனித் தனி நாடகங்களாகவும் இருக்கின்றன. ஒரு நாடகத்தின் சில கதைமாந்தர்கள் இரண்டாவது நாடகத்திலும் வருகிறார்கள், ஆனால் அதே கதை வரவில்லை, ஆயினும் அதே கதைக்கரு வருகிறது.how stage derama suvive in digital era?

காவல்நிலையத்திற்கு ஒரு எளிய பெண், வாய்பேசவியலாத தன் மகனுடன் பதற்றத்தோடு வருகிறார். தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் குறித்துப் புகார் செய்வதற்கு அல்ல, ஏற்கெனவே கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுவதற்கு! வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய புகார் அது. தங்களைத் தாக்கியவர்கள் புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் மகனைக் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்துகிறார்கள் என்று  காவல்நிலையத்தின் ஒவ்வொரு தூணிடமும் (காவலரிடமும்) சென்று முறையிடுகிறார். புகார் கொடுக்க வந்தபோது அலைக்கழிக்கப்பட்டது போலவே புகாரைத் திரும்பப் பெற வந்திருக்கிற நேரத்திலும்  நடக்கிறது.

திடீரென “டிஎஸ்பி அம்மா வந்துட்டாங்க” என்று காவல் நிலையம் பரபரப்படைய, ஆய்வுக்கு வருகிறார் துணைக் கண்காணிப்பாளர். கலக்கத்துடன் நிற்கும் தாயையும் மகனையும் கவனித்து நடந்ததை விசாரிக்கிறார். தலைமைக் காவலரிடம் பதிவு செய்யப்பட்ட புகாரைக் காட்டக் கூறுகிறார். ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தின் மீது, ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்தோரால் சாதி வன்மத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல், வழக்கமான தண்டனைச் சட்டத்தின் கீழ், முக்கியத்துவம் இல்லாத அடிதடிப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் விடுவதே தண்டனைக்குரிய குற்றமாயிற்றே!

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் –1989 கொண்டுவரப்பட்டு 36 ஆண்டுகள் ஆகின்றன. காவல் அதிகாரிகள் மிகப் பெரும்பாலும் குற்றவாளிகளைத் தண்டனையின்றித் தப்பிக்க வைக்கக்கூடிய, அல்லது மேம்போக்கான தண்டனைகளுக்கு உட்படுத்தக்கூடிய வகையில்தான் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் – அந்தச் சட்டத்தை பயன்படுத்த மறுக்கிறார்கள் – என்ற நாடுதழுவிய காட்சி மேடையேறுகிறது. பொறுப்புள்ள காவலர்கள் சட்டத்தை அக்கறையுடன் கையாண்டால் தாக்கப்படும் மக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு உறுதியாகும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவும் என்ற சிந்தனைகள் டிஎஸபி மூலமாக மற்ற காவலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் செல்கின்றன. இனி பார்வையாளர்கள் மூலமாக சமுதாயத்திற்குச் செல்ல வேண்டும்.how stage derama suvive in digital era?

நடப்பு நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று காட்டி, நீதிநூல்களைக் குறிப்பிடாமல், சட்டப் புத்தகத்தில் உள்ளபடி செயல்படக் கோருகிறது ‘பட்டாங்கில் உள்ளபடி‘.

புகாரைத் திரும்பப்பெற வந்த குடும்பத்தினருடன் காவலர்கள் ஊருக்குள் போகப் போகிறார்கள் என்று நினைக்கிறபோது, அடுத்த ஊரில் இறந்துபோன தலித் ஒருவரது உடலைப் பொதுவழியில் எடுத்துப் போக அனுமதிக்க முடியாது என்று ஆதிக்க சாதியினர்  தகராறு செய்கிற தகவல் வருகிறது. நாடகத்தின் அடுத்த பாகம் தொடங்குகிறது, தீண்டாமைக் கேவலத்தின் அடுத்தொரு பக்கம் விரிகிறது.

பொதுவழி மறிக்கப்பட்டால், சடலத்தை வெகுதொலைவு சுற்றி எடுத்துப் போக வேண்டியிருக்கும். அது தெரிந்தேதான் சாதிக்காரப் பெரிய மனிதன் தலைமையில், பாலினம் மாறினாலும் ஊறிப்போன பாகுபாடு மாறாத ஒரு கிழவியின் முன்னிலையில் அந்தக் கூட்டம் மறிக்கிறது. காலங்காலமாக அப்படித்தான் நடக்கிறது, அதை மாற்றவிடக் கூடாது என்று பேசிக்கொள்கிறார்கள். புரையோடிக் கிடக்கும் சாதிய வன்மம் அழுகிய பிணமாக நாறுகிறது.

டிஎஸ்பி படையுடன் வந்து அவர்களோடு பேசுகிறார். அவர்களின் வன்மம் மாறவில்லை. தலித் மக்கள் சடலத்தைச் சாலையிலேயே வைத்துவிட்டார்கள் என்ற செய்தி வருகிறது. இனியும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கைதான் என்று எச்சரித்துவிட்டு டிஎஸ்பி அங்கிருந்து நகர்கிறார். அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க  சற்று நேரத்தில் பிணம் தூக்கி வரப்படுகிறது. தூக்கி வருகிற நான்கு பேர்  டிஎஸ்பி, கோட்டாட்சியர், தலைமைக் காவலர், காவலர்!how stage derama suvive in digital era?

முன்னதாக, பொதுவழியை மறித்து உட்கார்ந்திருக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களிடையேயும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவர்களை அனுமதித்தால் என்ன என்று வாதிடுகிறவனைப் பார்த்து, “நாளைக்கு அந்தச் சாதிக்காரன் உன் பொண்ணைக் கேட்டு வந்தா கட்டிக்குடுப்பியா” என்று ஒருவன் கேட்கிறான். “என் பொண்ணு ஒருத்தனை விரும்புனா அவன் யாரா இருந்தாலும் கட்டிக்குடுப்பேன்” என்கிறான் அந்தத் தகப்பன். தலித் அல்லாத பிற சமூகங்களில் முளைவிட்டிருக்கிற, பேணி வளர்த்துப் பரப்ப வேண்டிய, நல்வழிக்கான மனமாற்றத்தை அந்த உரையாடல் உணர்த்துகிறது.

சிதைக்குத் தீ மூட்டுவதற்கு முன், இறந்தவனின் மகன், “எங்க பிரச்சினைக்கு நாங்க மட்டுந்தான் போராடணுமா” என்று கேட்கிறான்.  அது எதிரொலித்துக்கொண்டே இருக்க, அது வரையிலான நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்த டிஎஸ்பி அம்மாவைத் தாண்டி அவையோர் முன்னால் வந்து நிற்கிறார் தலைமைக் காவலர்.அந்த இடத்தில் நாடகத்தை முடித்துக்கொள்வதாக அறிவிக்கிறார். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் பொறுப்பை நம்மிடம் விடுகிறார்.

ஆழ்ந்த சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இரு நாடகங்களும் அதில் வெற்றி பெறுவதற்குக் காரணம், சிறப்பான கலை வெளிப்பாடு. காவல் நிலைய மேசை நாற்காலி முதல், மயானச் சிதை மேடை வரையில் எல்லா வடிவங்களையும் எடுக்கிற நான்கைந்து கருப்பு வண்ண சதுரத் திட்டுகள்தான் அரங்கப் பொருள்கள்.  அப்புறம் அந்தப் பாடையும் தீப்பந்தமும். பிணத்தோடு குத்தாட்டம் போட்டபடி வருகிறவர்களே, அடுத்து சாலையில் அமர்ந்து பாதையை மறிப்பவர்களாகவும் வடிவமெடுக்கிறார்கள். அநேகமாக நடிகர்கள் எல்லோருமே வெவ்வேறு பாத்திரங்களுக்கு மாறுகிறார்கள்.how stage drama suvive in digital era?

சட்டச் செயலாக்க அலுவலர்கள் எல்லோரும் இப்படி இருந்தால் சட்டங்களின் நோக்கம் பெரிதும் நிறைவேறுமே என்று எண்ண வைக்கும்   டிஎஸ்பி, “அருள்” வந்து உடலை முறுக்கி நாக்கைத் துறுத்தி அதிகாரியின் ஒரே அதட்டலில் அடங்கிப் போகும் “கிழவி”, காரணமே இல்லாத சாதி ஆணவத்தைப் பிரதிபலிக்கும் கும்பல் தலைவன், ஒரு காவல் நிலைய அன்றாடத்தைக் காட்டுவதாக வந்து போகிற டீக்கடை ஆள் என செரிவான சித்தரிப்புகள்.drama suvive in digital era?

சட்ட அறிவை மக்களுக்குப் பயன்படுத்தும் டிஎஸ்பி.யாக (அந்தக் கம்பீரமும் கறாரும்) அமலா மோகன், மிரட்டலுக்கு உள்ளான தாயாகவும் ஊராட்சித் தலைவராகவும் (அந்தப் பதற்றமும் சங்கடமும்)  மாளவிகா ராஷ்மி, தலைமைக் காவலராகவும் தட்டிக்கேட்கிற ஊர்க்காரராகவும் அசோக் சிங் (அந்தப் பணிவும் தெளிவும்), காவலராகவும் கிழவியாகவும் பௌஜி ஜ்வல் (அந்த நகைச்சுவை), சாதிக்கூட்டத் தலைவனாக (அந்தத் தெனாவெட்டு!) ஆலம் ஷா, மாற்றுத் திறனாளியாக சரண்ராஜ் சந்தோஷ், காவலர்களாக விதூர் ராஜராஜன், பிரேம், வருவாய் கோட்டாட்சியராக வெண்மணி,  டீக்கடை ஆளாக பெருமாள், ஊர்க்காரர்களாக சுஜய், மணிசுந்தரம், அர்ஷத், ரமேஷ் ஆகியோரின் நடிப்பு ஒரு காவல்நிலையத்தையும் ஊரையும் மேடையேற்றுகிறது. drama suvive in digital era?

மணிமாறன் வாசிக்கும் பின்னணிப் பறைத் தாளம் தானும் சேர்ந்து காட்சிகளின் உணர்வை அவையோருக்குக் கடத்துகிறது. ஒளியாளர் பாலசுப்பிரமணியன், உதவியாளர் சதீஷ் இருவரின் வெளிச்சக் கட்டுப்பாடு, சட்ட நிலவரம் பற்றி வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் துணை செய்கிறது. கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதை இடையூறின்றிக் காதுகளுக்குச் சேர்க்கிறது ஒலி ஏற்பாடு. சினிமாவில் கற்பனை வளமற்ற காட்சிகள் வரும்போது  மேடை நாடகம் போல இருக்கிறது என்று விமர்சகர்கள் கூறுவார்கள்.. நேர்த்தியான மேடை நாடகத்தைப் பார்க்கிறபோது அது போல சினிமா அமைந்துவிடாது என்று உணர முடியும். drama suvive in digital era?

அப்படியொரு படைப்பை, சமூக லட்சியமும் கலை நேர்த்தியும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் பிரளயன்.எத்தனை ஊர்களில் இவ்விரு தொகுப்பு நாடகங்களை வரவழைக்கிறார்களோ, அத்தனை ஊர்களிலும் பட்டாங்கில் உள்ளது பற்றியும் மீட்க வேண்டிய நல்வழி பற்றியும் பேசப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share