டாடா மோட்டார்ஸ் நிறுவனம் (TMPV) தனது புதிய மாடலான சியராவின் விநியோகத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு சியராவை (Tata Sierra) ஒரு புதிய தோற்றத்துடன் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் டாடா சியரா காரை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இந்த எஸ்யூவி காரின் டாப்-ஸ்பெக் மாடலின் விலை ரூ. 17.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும். டாடா சியரா காருக்கு ரூ. 2 லட்சம் முன்பணம் செலுத்தினால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்ற கணக்கீட்டை இங்கே பார்ப்போம்.
டாடா சியரா (Tata Sierra) விலை:
டாடா சியரா காரின் அடிப்படை மாடலான ஸ்மார்ட் பிளஸ்ஸின் விலை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். அதே சமயம் டெல்லியில் அதன் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 13.30 லட்சம் ஆகும். அதேபோல், டாப்-ஸ்பெக் அட்வென்ச்சர் பிளஸ் பெட்ரோல் டர்போ மாடலின் விலை ரூ. 17.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும், டெல்லியில் அதன் ஆன்-ரோடு விலை ரூ. 20.75 லட்சம் (டெல்லி) ஆகவும் உள்ளது. உங்கள் காரின் ஆன்-ரோடு விலை வெவ்வேறு நகரங்கள் மற்றும் வேரியண்டைப் பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடிப்படை மாடல் ஸ்மார்ட் பிளஸ்:
நீங்கள் அடிப்படை மாடல் டாடா சியரா ஸ்மார்ட் பிளஸ் காரை வாங்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதன் ஆன்-ரோடு விலை ரூ. 13.30 லட்சம் ஆகும். நீங்கள் ரூ/ 2 லட்சம் முன்பணம் செலுத்தி, மீதமுள்ள ரூ. 11.30 லட்சத்திற்கு 5 வருடக் கடன் எடுக்க வேண்டும். உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வங்கிகள் உங்களுக்கு 8.5 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடன் வழங்கலாம். இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் நீங்கள் மாதத்திற்கு ரூ. 23,193 EMI செலுத்த வேண்டும். நீங்கள் 3 வருடங்களுக்குக் கடன் எடுத்தால் மாதத்திற்கு ரூ. 35,685 EMI செலுத்த வேண்டும். அதேபோல், நீங்கள் 7 ஆண்டுகளுக்குக் கடன் வாங்கினால், மாதத்திற்குச் ரூ. 17,902 EMI செலுத்த வேண்டியிருக்கும்.
டாப் மாடல் அட்வென்ச்சர் பிளஸ்:
டாடா சியராவின் டாப்-ஆஃப்-லைன் அட்வென்ச்சர் பிளஸ் மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், அதன் ஆன்-ரோடு விலை ரூ. 20.75 லட்சம் ஆகும். நீங்கள் ரூ. 2 லட்சம் முன்பணம் செலுத்தி மீதமுள்ள ரூ. 18.75 லட்சத்திற்கு 5 வருடக் கடன் எடுக்க வேண்டும். 8.5 சதவீத வட்டி விகிதத்தில் உங்கள் மாதாந்திர EMI ரூ. 38,486 ஆக இருக்கும். 3 வருடக் கடனுக்கு மாதாந்திர EMI ரூ. 59,216 ஆக இருக்கும். அதேபோல், 7 வருடக் கடனுக்கு மாதாந்திர ரூ. 29,707 ஆக இருக்கும். உங்கள் EMI சுமையைக் குறைக்க விரும்பினால் உங்கள் முன்பணத்தை அதிகரிக்கலாம்.
நிதி நிபுணர்களின் ஆலோசனை:
உங்கள் காரின் விலை உங்கள் ஆண்டு வருமானத்தில் 50 சதவீதத்தைத் தாண்டடக்கூடாது என்றும், உங்கள் கார் கடன் மாதத் தவணை (EMI) உங்கள் கையில் கிடைக்கும் சம்பளத்தில் 20 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்றும் நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் நிதி நலனை உறுதி செய்யவும், நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கவும், உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கவும் நிதி நிபுணர்கள் இவ்வாறு அறிவுறுத்துகிறார்கள். எனவே அதை மனதில் வைத்து கார் வாங்கினால் நல்லது.
