திமுக எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மரக்கடையில் தனது முதல் பிரச்சாரத்தை இன்று (செப்டம்பர் 13) மதியம் தொடங்கி தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார் விஜய்.
தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பேசும் விஜய், திமுக வாக்குறுதிகளை பட்டியலிட்டு கேள்வி எழுப்பினார்.
வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், பணி நிரந்தரம் என பலவற்றையும் பட்டியலிட்ட விஜய், ‘சொன்னீங்களே செஞ்சிங்களா…
505 வாக்குறுதி அளித்தீர்களே எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் பிரச்சாரத்தில் மைக் வேலை செய்யாததால் அவர் பேசுவதை சரியாக கேட்க முடியவில்லை என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர்.