மோந்தா புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக வடமாவட்டங்களுக்கு அடுத்தடுத்து நாளை (அக்டோபர் 28) விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கி நாடா அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மோந்தா புயல் சென்னைக்கு 370 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகிறது.
அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
