இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் உலக அரங்கில் அதிகமாக விவாதிக்கப்பட்ட நபராக பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசிம் முனீர் இருக்கிறார். How did Asim Munir become the army chief
என்ன காரணம்?
பிப்ரவரி 14, 2019 அன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் கொல்லப்பட்ட கொடூரமான புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் போது, பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்சி) தலைவராக இருந்தவர் அசிம் முனீர். 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பஹல்காம் தாக்குதல் சமயத்தில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருக்கிறார். இது சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது.
காரணம், தாக்குதல் நடப்பதற்கு முன்பாக இவர் , காஷ்மீர் பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்திய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அசிம் முனிரின் பேச்சு வகுப்புவாத மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போல் இருப்பதாக கூறியிருந்தார். தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று அமெரிக்காவின் தலையிட்டால், இன்று முடிவுக்கு வந்தது.
ராணுவத்தில் இது முதல்முறை
இந்தநிலையில் அசிம் முனீர் குறித்து ,ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அகஸ்டின் வினோத் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
“இதுவரை இருந்த ராணுவ தலைவர்கள் “பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்று சொல்லக்கூடிய செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் இந்த முனீர் அப்படியில்லை. அவருக்கென்று யாரும் இல்லை. முனீர் இவ்வளவு மேலே வருவார் என்று அவரது நண்பர்களுக்கும் பேட்ச்மேட்களுக்கும் கூட தெரியாது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் , ராணுவத்தில் மதத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது ராணுவத்தில் ராணுவம் பற்றியும் படிக்க வேண்டும், மதம் குறித்தும் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
எந்த ராணுவத்திலும் மதத்தை படிக்க வேண்டும் என்று கூறமாட்டார்கள். ஆனால் ஜியா உல் ஹக் அதை செய்தார். அந்த சமயத்தில்தான் முனீர் உள்ளே வந்தார். மதம்தான் முக்கியம் என்று கருதக்கூடிய, ஒரு ஏழை குடும்பத்தில் வந்தவர் முனீர். எனவே போக்குவரத்து போலீஸ் போன்ற ஒரு சாதாரண பணியில் இருந்த முனீரை ராணுவத்துக்கு கொண்டு வந்தவர் ஜியா உல் ஹக். எல்லா ராணுவத்தினரின் வீட்டுக்கும் சென்று மதத்தை சொல்லிக்கொடு என்று ஜியா உல் ஹக் முனீருக்கு சொல்லிக்கொடுத்தார். அப்படிப்பட்ட முனீரால் இன்று ஒரு நாடே பாதிக்கப்படுவது வருத்தத்தை தருகிறது” என்று கூறினார்.
ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியான மேஜர் மதன்குமார் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான மரியாதை என்பது பாதாளத்தில் இருக்கிறது. மக்களுடைய கொந்தளிப்பும் கோபமும் அதிகமாக இருக்கிறது. முனீரின் பேச்சு முட்டாள்தனமானது. ஒரு ராணுவ தளபதிக்கே உண்டான மரியாதையோடு அவர் பேசவில்லை. சம்பந்தமே இல்லாமல் பழைய கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா நம் மீது தாக்கினால் பதிலுக்கு நாமும் கடுமையாக தாக்க வேண்டும் என்றுதான் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, பலுசிஸ்தான் பிரச்சினை, ராணுவத்தின் அடக்குமுறை, சைபர் தாக்குதல்களை எல்லாம் மறக்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் பாகிஸ்தான் இப்படி செய்துக்கொண்டிருக்கிறது” என்று கூறினார். How did Asim Munir become the army chief