காதலர்கள் தனிமையில் இருந்ததை பார்த்ததால் ஓசூர் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. Hosur boy murdered girlfriend arrested
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சிவராஜ் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகன் ரோஹித்.
சிறுவன் ரோஹித் உடல்நிலை சரியில்லை என்று நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளான்.
ஆனால் இரவு 8 மணி நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் அஞ்செட்டி காவல் நிலையத்தில் தங்கள் மகனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இரவே போலீசார் விசாரணையை தொடங்காமல் அலட்சியப்படுத்தியதாக நேற்று காலை சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில் திருமுடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் சிறுவன் கொலை செய்து கிடந்தது தெரியவந்தது.
அவனது வயிற்று மற்றும் கால்பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. மேலும் சிறுவனை கடத்தியதற்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்தக் காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை செய்ததில், அதே ஊரைச் சேர்ந்த புட்ண்ணன் என்பவரின் மகன் மாதேவன். மாரப்பன் என்பவரின் மகன் மாதேவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், புட்ண்ணன் மகன் மாதேவன், 20 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அங்குள்ள ஒரு வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதை சிறுவன் ரோஹித் பார்த்துள்ளான்.
இந்த நிலையில் தாங்கள் தனிமையில் இருந்ததை மற்றவர்களிடம் சொல்லிவிடுவான் என்று நினைத்த மாதேவன், தனது நண்பர் மாதேவாவிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இந்த நிலையில் இருவரும் சிறுவனிடம் நைசாக பேசி தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்களது காரில் ஏற்றி ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருந்த பீரை சிறுவனின் வாயில் ஊற்றியுள்ளனர்.
பின்னர் திருமொடுக்கு பகுதியில் 50 அடி பள்ளத்தில் சிறுவனை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே மாதேவா, மாதேவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் இன்று (ஜூலை 4)கல்லூரி மாணவியான மாதேவன் காதலியையும் போலீசார் கைது செய்துள்ளனர். Hosur boy murdered girlfriend arrested