ADVERTISEMENT

நாள் முழுவதும் சருமம் மென்மையாக, மிருவாக இருக்க.. குளிக்கும்போது இதை செய்யுங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

home remedies for skin soft and supple in full day

நாள் முழுவதும் உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க குளிக்கும்போது செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் குறித்து பார்ப்போம்.

குளிர்காலங்களில் சருமத்திற்கு நீரிழப்பு அதிகமாக ஏற்படுவதால் முகம், கை, கால்கள் வறண்டுவிடுவதோடு, வெள்ளையாகிவிடுவதையும் பார்த்திருப்போம். வறண்ட சருமம் காரணமாக மிகவும் அவதிப்பட வேண்டிய சூழல் உருவானது. இதை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் பலரும் க்ரீம்கள், லோஷன்கள் பயன்படுத்துவார்கள். குறிப்பாக நீரிழப்பு காரணமாக சருமம் வறட்சியடைவதால் மக்கள் நிறைய தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ADVERTISEMENT

குளிக்கும்போது நாம் சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தினால் சரும வறட்சியில் இருந்து தவிர்க்க முடியும்.

குளிக்கும் தண்ணீரில் தேங்காய் எண்ணெய், பால் கலக்கலாம் (winter skincare tips) : குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது நமக்கு புத்துணர்வை தரும். ஆனால், சருமத்தில் இருக்கும் எண்ணெய்யை நீக்குவதால் அது வறண்டுவிடுகிறது. இதனை தடுக்க குளிக்கும் தண்ணீர் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கலாம். இதன்மூலம் குளித்து முடித்த வெளியே வரும்போது உங்கள் சருமத்தின் ஈரப்பதம் ஆவியாகாமல் தடுக்கலாம். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளதால் அது இறந்த சருமத்தை நீக்குகிறது. மேலும் வைட்டமின் ஏ சருமத்தை உள்ளே இருந்து அதிகப்படுத்துகிறது. வாளியில் அரை கப் பால் சேர்ப்பது உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றும்.

ADVERTISEMENT

தயிர் மற்றும் தேன் கலவை (Yogurt and honey skin remedies) : குளிர்காலத்தில் நேரடியாக சோப்பைப் பயன்படுத்துவது சருமத்தின் pH அளவை சீர்குலைத்து, சருமத்தில் வெடிப்பு ஏற்பட வழிவகுக்கிறது. சோப்புக்குப் பதில் ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் அரை தேக்கரண்டி தேன் கலந்த பேஸ்ட்டை முகத்தில் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் வெற்று நீரில் கழுவ வேண்டும். தேன் என்பது காற்றில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து உங்கள் சருமத்தில் இயற்கையாக ஈரப்பதமூட்டுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குளிர்கால முகப்பருவைத் தடுக்கவும் உதவுகின்றன. தயிரில் உள்ள நல்ல கொழுப்புகள் முகத்தின் வறட்சியை வேரிலிருந்து நீக்கி, குளிர்காலத்தில் ஏற்படும் டானிங்கை நீக்கி முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவருகின்றன.

வறண்ட சருமத்தை தவிர்க்க (tips Avoid dry skin) : அதிகப்படியான சூடான நீர் சருமத்தை வறட்சியாக்கும். ஆகவே, எப்போதும் வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வேண்டும். குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உங்கள் உடலை முழுவதுமாக உலர்த்துவதற்கு முன் லோஷன் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share