விஜய் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததா என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு உளவு துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒய், இசட் என பல பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சார பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி உள்ளனர். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட போது விஜய்யின் கவனத்தை ஈர்க்க அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரச்சனையை தூண்டும் வகையில் திட்டமிட்டே அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததா என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சம் விளக்கம் கேட்டுள்ளதாகவும்,
பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதில் அடிப்படையில் விஜய்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வருகின்றன.