7.5% இடஒதுக்கீடு : திமுக எப்போது பேசியது உண்டா? – சட்டப்பேரவையில் அதிமுக அமளி

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2026-2027 குறித்த பொது விவாதம் இன்று (பிப்ரவரி 18) காலை சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுகவின் போராட்டமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு காரணம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்நிலையில், “7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் கொண்டு வந்தோம்” என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “விளம்பரம் தேடும் செயலில் தமிழக அரசு ஈடுபடுகிறது. திமுக – அதிமுக ஆட்சிகளைச் சேர்த்துதான் 11.19 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசு பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமலேயே மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியது. அதற்கு திமுக சொந்தம் கொண்டாடுவதா? 7.5 சதவீத ஒதுக்கீடு குறித்து திமுக எப்போதாவது பேசியது உண்டா? இருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக என்ன சாதித்தது? நீட் தேர்வை ரத்து செய்தீர்களா? மா. சுப்பிரமணியன் எதைக் கூறினாலும் தவறாகத்தான் கூறுகிறார். மாணவர்களுக்கு படிக்கும் போது மடிக்கணினி கொடுக்காமல், படித்து முடித்த பின் கொடுத்தது ஏன்?” என்று காட்டமான கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share