ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது 95 வயதான ஜீன் ஹாக்மேனும் அவரது மனைவியான 65 வயதான பெர்சியும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள சாந்தா ஃபே என்ற நகரத்தில் வசித்து வந்தனர். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். தனி தனி அறையில் அவர்கள் சடலங்களாக கிடந்தனர். அருகே மாத்திரைகளும் மருந்துகளும் சிதறி கிடந்துள்ளன. அவர்கள் வளர்த்து வந்த நாயும் வீட்டுக்குள் இறந்து கிடந்தது.Hackman died 9 days earlier
ஹாக்மேன் கிட்டத்தட்ட 100 படங்கள், டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு பிரெஞ்சு கனெக்ஷன் படத்துக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். சாந்தாபே நகரிலுள்ள வீட்டில் தம்பதி அமைதியாக வசித்து வந்தனர். வீட்டை விட்டும் வெளியே வருவதில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு ஹாக்மேன் ஒரு முறை வளர்ப்பு நாயுடன் வெளியே வந்தததை பார்த்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.Hackman died 9 days e
இந்த நிலையில் அவரது உடற்கூறு ஆய்வறிக்கைக்கு பிறகு சாந்தா ஃபே நகர ஷெரிப் மென்டோசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”ஹாக்மேனின் பேஸ்மேக்கர் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி கடைசியாக இயங்கியுள்ளது. இதுதான் அவரின் கடைசியாக உயிர் வாழ்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததால் ஹாக்மேன் அவரது மனைவி உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், உடற்கூறு ஆய்வில் ஹாக்மேன் அவரின் மனைவி பெர்சியா உடலில் கார்பன் மோனாக்ஸைடு இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.