நிதியமைச்சரைக் கண்டித்து அரசு அலுவலர்கள் போராட்டம்!

அரசியல்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி 5 இடங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. அதில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாக்குறுதிகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் ஆட்சி அமைத்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், மயிலாடுதுறையில் அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநிலக் குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 31) நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சண்முகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுருளிராஜன், மாநில துணைத்தலைவர் அமிர்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில், அரசு ஊழியர்களை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறி தமிழக நிதியமைச்சரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து கூறியுள்ள ஆர்.சண்முகராஜன் , “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழக நிதியமைச்சரைக் கண்டித்து திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மண்டலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதுதவிர, வருகிற 8ஆம் தேதி அரசு அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா

நிதித்துறை சீர்திருத்தமும் நிலைகுலைந்த இந்தியாவும் : பகுதி 3

+1
1
+1
4
+1
0
+1
3
+1
8
+1
4
+1
2

9 thoughts on “நிதியமைச்சரைக் கண்டித்து அரசு அலுவலர்கள் போராட்டம்!

 1. திராவிட மாடல் இல்லைனா இலங்கை மாடலாயுடுவோம்

 2. இவர் தமிழ்நாடு குடிநீர் வாரிய பென்ஷனர்களுக்கு மட்டும் DA 17 to 31% January 1.1.22 முதல் கொடுக்க மறுக்கிறார். மற்ற அனைத்து
  அரசு, வாரியம் பென்ஷனர்களுக்கும்
  கொடுத்து விட்டார். குடிநீர் வாரிய அமைச்சர் கேட்டுக் கொண்டும் இன்று வரை இல்லை. இவரால் திமுக விற்கு கெட்ட பெயர். என்ன திராவிட மாடலோ.

 3. PTR. Palanivel rajan is anti working class. Ho does not offer the dues due to Goveemt employees and pensioners. Even old pension was not sanctioned. He does not realize the difficulties of employees and pensioners. Early settlement of DA is requested

 4. அரசு ஊழியர்கள் சாதாரண மக்களை விட அதிகமாக சம்பளம் பெறுகின்றனர்.ஆனால் அரசின் நிதி நிலைமையை அறிந்த உங்களுக்கு இது புரியாதா? நிதி நிலைமை சீரடையும் போது உங்களுக்கும் மக்களுக்கும் தாங்கள் சொன்னதை இந்த அரசு நிறைவேற்றும்.. நீங்கள் வாங்கும் உங்களுடைய தற்போதைய சம்பளத்திற்குண்டான வேலையினை சரியாக செய்யும் போது எல்லாமா சரியாகி விடும்…அரசை குறை சொல்வதை நிறுத்துங்கள்.உங்களைவிட கஷ்டப்படும் பொதுமக்களையும் நினைவு கொள்ளுங்கள்..அன்புடன் முன்னாள் அரசு பணியாளர்.

   1. திராவிட மாடல் இல்லைனா இலங்கை மாடலாயுடுவோம்

  1. Government needs to fulfill the expectations of all categories….
   Don’t confuse with the issues of different categories…

   Any government has the potential to serve various categories of people..

   If FM compares the government employees with the needs of the poor people, why doesn’t he compare the employees with accumulated properties of politicians in power…

   Salary to employees are not determined by the employees themselves…

   It is determined by concerned pay commission …

   1. You are Right,Sir. In no country/state the politicians make cheap comments about their employees,like our Tamil politicians. They think they are the only people working for poor and downtrodden. They forget that whatever they pay to the Government servants will be spent on local markets. It will not be kept in safe or in foreign banks. It will boost economy and purchasing powe of the common people.

Leave a Reply

Your email address will not be published.