இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிரிழந்த அரசு மகப்பேறு மருத்துவர்!

Published On:

| By christopher

பிரசவ வலி ஏற்பட்டவுடன் மருத்துவனையில் அனுமதிக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக மகப்பேறு மருத்துவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் மகள் அஞ்சுதா. இவர் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சுதாவிற்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். ஆனால் காலதாமதமாக அனுமதிக்கப்பட்டதால் பிரசவத்தின் போது இரட்டை குழந்தையை பெற்றெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

அஞ்சுதாவின் மறைவு பெருந்துயரம்! – விஜயபாஸ்கர்

இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் சோகத்துடன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதாவின் மறைவு பெருந்துயரம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ”புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம்.

மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயபாஸ்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கவிதா ஜாமீன் வழக்கின் மீது மே 6ல் உத்தரவு!

Gold Rate : மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share