ADVERTISEMENT

தீபாவளி நெருங்க நெருங்க… ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை!

Published On:

| By christopher

gold price reach 87000 per 8 gram today

சென்னையில் தங்கம் விலை இன்று (அக்டோபர் 4) சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க ஆபரணத்தங்கத்தின் விலையைக் கண்டு நகைபிரியர்களே நடுங்கும் அளவுக்கு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 50 உயர்ந்து ரூ.10,950க்கும், ஒரு சவரன் ரூபாய் 400 உயர்ந்து, ரூ.87,600க்கும் விற்பனையாகி வருகிறது.

அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 55 உயர்ந்து ரூ.11,946க்கும், ஒரு சவரன் ரூபாய் 440 உயர்ந்து, ரூ.95,568க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலையானது இன்று ஒரு கிராமுக்கு ரூ.3 உயர்ந்து 165க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 3,000 உயர்ந்து ரூ.1,65,000க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்த நிலையில், அடுத்த ஒரு மாத காலத்தில் சுமார் 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்னும் 15 நாட்களில் தீபாவளி வர உள்ள நிலையில், தங்கம், வெள்ளியின் விலை லட்சத்தை நோக்கி உயர்ந்து வருவது நகைபிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share