நவராத்திரி எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரன் ரூ.1,120 உயர்ந்து ரூ.83 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்டு வருகிறது. இந்தியா முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அதோடு நவராத்திரி பண்டிகை எதிரொலியாக தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்ந்ததை அடுத்து முதன்முறையாக ஒரு சவரன் ரூ.83,000த்தை கடந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை (செப்டம்பர் 22) ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.10,360க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.82,880க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.83,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 10,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.