சென்னையில் இன்று (நவம்பர் 8)ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.30 உயர்ந்து விற்பனை செய்யபடுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. உலக அளவில் தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தங்கத்தின் விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த அக்டோபர் மாதம் 17 ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் ரூ.200ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இது நகைப்பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தீபாவளிக்கு பின் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் ஆபணத்தங்கம் ரூ.240 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.165 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 7 -11-2025 | 90,160 |
| 6 -11-2025 | 90,560 |
| 5 -11-2025 | 89,440 |
| 4 -11-2025 | 90,000 |
| 3 -11-2025 | 90,800 |
| 2 -11-2025 | 90,480 |
| 1 -11-2025 | 90,480 |
| 31 -10-2025 | 90,400 |
| 30 -10-2025 | 90,400 |
| 29 -10-2025 | 90,600 |
