2025ம் ஆண்டின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.120 வரை குறைந்துள்ளது.
2025ம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தும், வெள்ளி விலை ரூ.285 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.960 வரை குறைந்துள்ளது.
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.70 குறைந்து ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் தங்கம் தற்போது மேலும் ரூ.560 குறைந்து ரூ. 99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று மாலை 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.10,410க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் ரூ. 1குறைந்து ரூ. 257க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,57,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 30-12-2025 | 1,00,800 |
| 29-12-2025 | 1,04,160 |
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
| 24-12-2025 | 1,02,400 |
| 23-12-2025 | 1,02,160 |
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 30-12-2025 | 258 |
| 29-12-2025 | 281 |
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
| 24-12-2025 | 244 |
| 23-12-2025 | 234 |
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
