சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 30) மேலும் ரூ.720 வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருவது எளிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 30) ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.86,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 30) ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ. 161க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ தங்கம் விலை ரூ.1,61,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று (செப்டம்பர் 29) மாலை ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,770க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ. 86,160க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை ஒரு சவரனுக்கு ரூ.480ம், மாலை ரூ.560ம் உயர்ந்து ஒரே நாளில் ரூ.1,040 வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.