ஒரு சவரன் தங்கம் விலை இன்று (செப்டம்பர் 19) ரூ.80 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்கள், போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக சற்றே சரிந்த தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கம் இன்று (செப்டம்பர்-19) ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.10,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ. 81,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று (செப்டம்பர் – 19) ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.143க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,43,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் நேற்று (செப்டம்பர்-18) ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ. 81,760க்கு விற்பனை செய்யப்பட்டது.