iPhone 17 Series… இந்தியாவில் விற்பனை தொடக்கம்! மும்பையில் நள்ளிரவு 12 மணி முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்த பொதுமக்கள்

Published On:

| By Mathi

I Phone Series

Apple நிறுவனத்தின் ஐபோன்கள்- iPhone 17 Series மாடல்கள் இன்று (செப்டம்பர் 19) முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. iPhone 17 Series- ஐபோன்களை வாங்க மும்பையில் நள்ளிரவு 12 மணி முதலே வாடிக்கையாளர்கள் குவிந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

iPhone 17 Series-ல் மொத்தம் 4 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஐபோன்களுக்கு ரூ10,000 கேஷ்பேக் , நோ காஸ்ட் EMI உள்ளிட்ட அறிமுக சலுகை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்தும் ஆப்பிள் நிறுவன ரீட்டெயிலர்களிடம் இருந்தும் ஐபோன்களை வாங்கும் போது வெவ்வேறு சலுகைகள் கிடைக்கும்.

ADVERTISEMENT

மும்பையில் உள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் நிறுவனத்தில் இந்த ஐபோன்கள் விற்பனை இன்று தொடங்குகிறது. ஐபோன்களை சலுகை விலையில் பெறுவதற்காக இன்று நள்ளிரவு 12 மணி முதலே பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகளில் ஆப்பிள் நிறுவனம் முன்பாக காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share