ஆபரண தங்கம் விலை இன்று இரண்டாவது நாளாக சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலலவரங்களுக்கு ஏற்பட்ட தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை 80 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்றும் இன்றும் சற்றே சரிவை கண்டுள்ளது. இந்நிலையில் இன்று கிராமுக்கும் ரூ.50 குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் இன்று (செப்டம்பர்-18) ரூ.50 குறைந்து ரூ10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ. 81,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று (செப்டம்பர் – 18) ரூ.1 குறைந்து ரூ.141க்கு விற்பனை செய்யப்படுகறிது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,41,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று (செப்டம்பர் – 17) ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.10 குறைந்து ரூ.10,270க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.82,160க்கு விற்பனையானது.