நாள்தோறும் தங்கம், வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றம் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்று (அக்டோபர் 16) ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தை நிலவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.95,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று (அக்டோபர் 16) ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.11,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (அக்டோபர் 16) ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து 206க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1000 ஆயிரம் குறைந்து ரூ.2,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
15-10-2025 | 94,880 |
14 -10-2025 | 94,600 |
13 -10-2025 | 92,640 |
12-10-2025 | 92,000 |
11-10-2025 | 92,000 |
10-10-2025 | 91,720 |
9-10-2025 | 91,400 |
8-10-2025 | 91,080 |
7- 10-2025 | 89,600 |
6-10-2025 | 89,000 |