தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று (அக்டோபர் 15) தங்கம் ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலகளாவிய தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர் பதற்றங்கள், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.95,000த்தை நெருங்கி உள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று (அக்டோபர் 15) ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.11,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
ஏழைகளின் தங்கம் என்று அழைக்கப்பட்ட வெள்ளி விலையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து 207க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1000 ஆயிரம் உயர்ந்து ரூ.2,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
14 -10-2025 | 94,600 |
13 -10-2025 | 92,640 |
12-10-2025 | 92,000 |
11-10-2025 | 92,000 |
10-10-2025 | 91,720 |
9-10-2025 | 91,400 |
8-10-2025 | 91,080 |
7- 10-2025 | 89,600 |
6-10-2025 | 89,000 |
5-10-2025 | 87,600 |