சென்னையில் தங்கம் விலை இன்று (செப்டம்பர் 27) சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து மீண்டும் ரூ.85 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலையைக் கண்டு நகைபிரியர்களே நடுங்கும் அளவுக்கு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 90 உயர்ந்து ரூ.10,640க்கும், ஒரு சவரன் ரூபாய் 720 உயர்ந்து, ரூ.85,120க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 99 உயர்ந்து ரூ.11,608க்கும், ஒரு சவரன் ரூபாய் 792 உயர்ந்து, ரூ.92,864க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையானது இன்று ஒரு கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 156க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 6000 உயர்ந்து ரூ.1,56,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த 6 ஆம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்த நிலையில், அடுத்த 20 நாட்களில் சுமார் 5000 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி வர உள்ள நிலையில், இந்தாண்டு தங்க நகை வாங்க வேண்டும் என்பது கனவாகிவிடுமோ என பாமர மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.