அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று காலை (பிப்ரவரி 4) ஒரு கிராம் தங்கம் ரூ.630 உயர்ந்து நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 வரை உயந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 வரை உயர்ந்த நிலையில் இன்று காலையிலேயே ரூ. 5,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.540 குறைந்து ரூ.12,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலவரம்

ஏழைகளின் தங்கம் என்று அழைக்கப்படும் வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
30-1-20261,26,800
29-1-20261,34,400
28-1-20261,24,880
27-1-20261,19,680
26-1-20261,20,200
25-1-20261,18,000
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320
30-1-2026405
29-1-2026425
28-1-2026400
27-1-2026387
26-1-2026375
25-1-2026365
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share