சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.91,000த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று (அக்டோபர் 8) பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.185 உயர்ந்து ரூ.11,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1480 உயர்ந்து ரூ.91,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.