நகைபிரியர்களே குட் நியூஸ் உங்களுக்குதான்.. அதிரடியாக சரிந்த தங்கம்; வெள்ளி விலை

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Price on 5 December 2025

சென்னையில் இன்று (டிசம்பர் 5) தங்கம் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 குறைந்துள்ளது.

சர்வதேச விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ச்சியாக ஏற்ற, இறங்கங்கள் உருவாகி வருகிறது. இந்த வார துவக்கத்தில் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 வரை குறைந்துள்ளது. வெள்ளியும் அதிரடியான சரிவை சந்தித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.96,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ. 10,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.196க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 வரை குறைந்து ரூ.1,96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

ADVERTISEMENT
4-12-202596,160
3-12-202596,480
2-12-202596,320
1-12-202596,560
30 -11-202595,840
29 -11-202595,840
28 -11-202594,720
27 -11-202594,160
26 -11-202594,400
25 -11-202593,760
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
4-12-2025200
3-12-2025201
2-12-2025196
1-12-2025196
30 -11-2025192
29 -11-2025192
28 -11-2025183
27 -11-2025180
26 -11-2025176
25 -11-2025174
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share